இனி விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க மாட்டாரா தொகுப்பாளினி பாவனா?
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க சில பேர் உள்ளார்கள். டிடி, மாகாபா, பிரியங்கா, ரக்ஷன், மணிமேகலை, அர்ச்சனா, நிஷா என நிறைய தொகுப்பாளரகள் இந்த தொலைக்காட்சி மூலம் உருவாகி வருகிறார்கள்.
இதற்கு முந்தைய காலங்கயில் விஜய் தொலைக்காட்சியின் ஹிட் தொகுப்பாளராக இருந்தவர் பாவனா. இவரும், சிவகார்த்திகேயனும் இணைந்து வழங்கிய நடன நிகழ்ச்சி இப்போதும் மக்கள் அனைவருக்கும் பேவரெட்.
பின் பாவனா கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் பாவனாவை ரசிகர்கள் பலரும் மிஸ் செய்தார்கள்.
இந்த நிலையில் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க இருக்கிறார் பாவனா. ஆனால் அதில் ஒரு மாற்றம், அது என்னவென்றால் பாவனா இனி விஜய் தொலைக்காட்சியில் வரப்போவதில்லை.
அவர் இனி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் Dance Vs Dance 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறாராம்.