இனி விஜய் டிவி பக்கம் போகவே மாட்டேன், காரணம்- தொகுப்பாளினி பாவனா ஓபன் டாக்
விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் பாவனாவும் ஒருவராக இருந்தார். நடனம், பாடல் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
அதிலும் அவர் சிவகார்த்திகேயனுடன் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சி சூப்பர் டூப்பர் ஹிட். அதன்பிறகு கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைக்க அங்கேயும் ஒரு ரவுண்ட் வந்தார்.
இப்போது கலர்ஸ் டிவியில் நடன நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். வழக்கமாக விஜய்யில் வரும் பாவனா இப்போது மற்றொரு டிவிக்கு செல்ல அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
விஜய் டிவிக்கு வருவீர்களா என கேட்டதற்கு பாவனா, இனி விஜய் டிவிக்கு பக்கம் வரவே மாட்டேன். காரணம் அவர்களது ஸ்டைல் மாறிவிட்டது, காமெடியாக மட்டுமே நிகழ்ச்சியை கொண்டு செல்ல விருப்பப்படுகிறார்கள்.
என்னுடைய ஸ்டைல் வேறு, இதனால் அந்த டிவிக்கு இனி செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.