தனக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பதிலடி.. தொகுப்பாளினி பாவனா ஓபன் டாக்
சிவகார்த்திகேயன்
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தமிழ் சினிமாவில் களமிறங்கி சாதித்த பிரபலங்கள் பலர் உள்ளனர்.
அந்த லிஸ்டில் உள்ள பிரபலம் தான் நடிகர் சிவகார்த்திகேயன், அப்பா போலீஸ் அதிகாரி, அவரது ரூட்டில் செல்லாமல் தனக்கு என்ன பிடிக்குமா அந்த துறையில் களமிறங்கியவர்.
முதலில் சின்னத்திரையில் களமிறங்கியவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வெளிக்காட்டி இப்போது வெள்ளித்திரையில் முன்னணி கதாநாயகனாக கலக்கி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை நடத்தியது.
அடுத்து மதராஸி, பராசக்தி போன்ற படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ளது.
தொகுப்பாளினி
நடிகராவதற்கு முன் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக கலக்கியிருந்தார். அவருடன் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாவனா சமீபத்தில் ஒரு பேட்டியில், சிவகார்த்திகேயன் போராட்டக் குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
துரோகம், வளர்ச்சியைத் தடுப்பது என அவருக்கும் யாராவது ஏதாவது செய்தால் அதையெல்லாம் உடைத்து பல மடங்கு வளர்ச்சியடைந்து சாதித்துவிட்டு வந்து மீண்டும் அவர்களுடன் அன்புடன் இயல்பாகப் பழகுவார்.
அவர் அப்படித்தான் கெடுதல் நினைப்பவர்களுக்குப் பதிலடி கொடுப்பார். அதுதான் அவரது போராட்டக் குணம். அது எனக்கு வியப்பாக இருக்கும் என பேசியிருக்கிறார்.