வி.ஜே. சித்ராவின் பிறந்தநாளை கொண்டாடிய அவரது பெற்றோர்கள் - கண்கலங்க வைத்த புகைப்படம்
தொகுப்பாளினியாக இருந்து, அதன்பின் சில சீரியலில் நடிக்க துவங்கி பிரபலமானவர் விஜே சித்ரா.
இதன்பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவர் நடித்து வந்த முல்லை கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம்பிடித்தது.
சின்னத்திரையில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வந்த விஜே. சித்ரா சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார்.
ஆம் விஜே. சித்ரா பிரபல சொகுசு ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியானது.
இந்நிலையில் அவர் மறைந்த சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது இன்று அவரது பிறந்தநாள். ஆம் தனது மகளின் பிறந்தநாளை அவருக்கு பதிலாக அவரது, பெற்றோர்கள் கேக் வெட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி தனது மகளின் போட்டோவிற்கு சித்ராவின் தந்தை கேக் ஊட்டும் புகைப்படம் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.
இதோ அந்த புகைப்படம் மற்றும் வீடியோ..