விவாகரத்து மற்றும் இரண்டாம் திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய தொகுப்பாளினி மகேஷ்வரி- அவரே கொடுத்த பேட்டி

anchor divorce vjmaheshwari
By Yathrika Feb 04, 2022 06:11 AM GMT
Report

தொகுப்பாளினிகள் தமிழ் சினிமாவில் அதிகம் உள்ளார்கள். ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர்களில் ஒருவர் மகேஷ்வரி, இவர் இப்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

கமல் நடிக்கும் விக்ரம், விக்ரம் நடிக்கும் மகான், செல்வராகவன் நடிக்கும் சாணி காகிதம் போன்று அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடிக்கிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் ரைட்டர் என்ற திரைப்படம் கூட வெளியாகி இருந்தது.

மகேஷ்வரி இந்த கொரோனா காலகட்டத்தில் அதிக போட்டோ ஷுட் எல்லாம் நடத்தினார், அதனால் மக்களின் கவனத்தில் இருந்த வண்ணம் இருந்தார்.

இந்த நிலையில் தொகுப்பாளினி மகேஷ்வரி ஒரு பேட்டியில் தனது விவாகரத்து குறித்தும், இரண்டாவது திருமணம் பற்றியும் பேசியுள்ளார்.

அதில் அவர், 10 வருடத்திற்கும் மேலாக நான் சிங்கிளாக தான் உள்ளேன். நிறைய நேரங்களில் நம் வாழ்க்கை ஏன் சரியாக அமையவில்லை என்று கஷ்டப்பட்டுள்ளேன், ஒருகட்டத்தில் இதுதான் நம் தலையில் எழுதி இருக்கும் தலையெழுத்து என்று நினைத்துக் கொள்வேன்.

எனக்கு திருமணம் நடந்து ஒரு வருடத்திலேயே பிரிந்துவிட்டோம், குழந்தையை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருந்தேன்.

இரண்டாவது திருமணம் குறித்த பயம் எனக்கு அதிகம் உள்ளது, அவர் எப்படி இருப்பார், அந்த திருமணம் நீண்டநாள் வருமா என்ற பயம் இருக்கிறது என பேசியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US