போலீசில் புகார் அளித்த பிக் பாஸ் 6 பிரபலம்.. என்ன நடந்தது தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6ல் பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் VJ மகேஸ்வரி.
இந்த சீசன் டைட்டில் பட்டத்திற்கு அசீம், விக்ரமன் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அசீம் அதிக வாக்குகள் பெற்று டைட்டில் பட்டத்தை வாங்கினார்.
மகேஸ்வரி vs அசீம்
இவரின் இந்த வெற்றி நியாயமற்றது என்று VJ மகேஸ்வரி அவரின் ட்விட்டர் பக்கத்தில் பல கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
இதனால் அசீம் ரசிகர்கள் மகேஸ்வரியை தாக்கி பேசி வந்தனர். சிலர் எல்லை மீறி அவரின் மகனையும் தவறாக பேசினார்கள். இதற்கு மகேஸ்வரி, " என்னை குறித்து எப்படி வேணாலும் பேசுங்கள் ஆனால் என் மகனை பற்றி தவறாக பேசாதீர்கள்" என்று வார்னிங் கொடுத்தார்.
இதன் பிறகும் சிலர் மிக மோசமான கமன்ட்களை பதிவிட்டதால், மகேஸ்வரி அந்த நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
நீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத்தின் மகளா இவர்?- இப்படி ஒரு திறமையா, வீடியோவுடன் இதோ

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
