கிளாமராக நடிக்க ஆசை!! வெளிப்படையாக பேசிய விஜே மகேஸ்வரி..
விஜே மகேஸ்வரி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக மாறியவர் தான் விஜே மகேஸ்வரி.
மேலும் இவர் சென்னை 28, பியார் பிரேமா காதல், ரைட்டர், சோல் மேட், விஷமக்காரன், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.
நடிக்க ஆசை!!
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விஜே மகேஸ்வரி, கிளாமரான காட்சியில் நடிப்பது பபற்றி பேசியுள்ளார். அதில் அவர், " நான் ஒரு நெருக்கமான காட்சியில் நடித்தேன் அது பிரபலமானது. நான் ஒரு வெப் தொடரில் நடித்தேன் அது சில காரணத்தால் ட்ராப் ஆகிவிட்டது. அந்த தொடரில் இருந்த நெருக்கமான காட்சிகளை மட்டும் எடுத்து ஒரு வீடியோ சாங்-காக வெளியிட்டனர்".
"கதைக்கு தேவையென்றால் நான் அப்படி நடிக்க தயார் தான். நிறைய பேர் என்னிடம் கிளாமர் சாங் பண்ண சொன்னார்கள். கிளாமர் சாங் பண்ண எனக்கும் ஆசை இருக்கிறது" என்று விஜே மகேஸ்வரி கூறியுள்ளார்.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
