நான் பாம்பா? பிக் பாஸ் அஸீமுக்கு பதிலடி கொடுத்த மகேஸ்வரி
பிக் பாஸ்
உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 6வது சீசன் சில வாரங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்த சீசனில் ஷிவின், விக்ரமன், அசீம் என மூவரிடையே கடும் போட்டி நிலவியது.
பல பேர் விக்ரமன் தான் வெற்றியாளராக இருக்க போகிறார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் அதிக ஓட்டுகள் பெற்று அசீம் டைட்டில் பட்டத்தை வாங்கினார். சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சிலர் ஆதரவு கொடுத்தும் வந்தனர். அதிலும் பிக் பாஸ் போட்டியாளர் மகேஸ்வரி சமூக வலைத்தளங்களில் அசீமிற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
பாம்பு?
இந்நிலையில் அசீம் லைவ் வீடியோ ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது அவரிடம் பிக் பாஸ் போட்டியாளர்களில் யார் பாம்பு? என கேள்வி கேட்டனர். அதற்கு அசீம்," மகேஸ்வரி தான் பாம்பு" என்று கூறினார்.
இந்நிலையில் இதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் மகேஸ்வரி, " யாரோ என்னை பாம்பு என்று சமூக வலைத்தளங்களில் கூறியுள்ளனர். இது போன்று பல கோமாளிகள் சொல்வார்கள். நம்மை பாம்பு என்று சிலர் அழைக்கலாம், ஆனால் அந்த கோமாளிகளால் நம்மை ஜெயிக்க முடியாது" என்று கூறியுள்ளார். தற்போது இவரின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தளபதி 67 படத்தில் கமிட்டாகியுள்ள நட்சத்திரங்கள்.. வெளிவந்த லிஸ்ட் இதோ

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
