"ஏளனமா பேசுனாங்க".. கண்கலங்கிய VJ மணிமேகலை.. ஜீ தமிழ் நிகழ்ச்சியில் என்ன நடந்தது
VJ மணிமேகலை
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் VJ மணிமேகலை. இவருக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நல்ல வரவேற்பை மக்களிடையே ஏற்படுத்தி கொடுத்தது.
கோமாளியாக மக்களை தொடர்ந்து மகிழ்வித்து வந்த மணிமேகலை, குக் வித் கோமாளி சீசன் 5ல் தொகுப்பாளினியாக வந்தார். இதன்பின் நடந்த சில பிரச்சனைகள் காரணமாக விஜய் டிவியில் இருந்து தான் வெளியேறியுள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.
இவருடைய வெளியேற்றத்திற்கு தொகுப்பாளினி பிரியங்கா தான் காரணம் என ரசிகர்களிடையே கிசுகிசுக்கப்படுகிறது. விஜய் டிவியில் இருந்து வெளியேறிய VJ மணிமேகலை ஜீ தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
ஆம், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய்யுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
கண்கலங்கிய மணிமேகலை
இந்த நிலையில், கடந்த வாரம் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் எபிசோடில் VJ மணிமேகலை கண்கலங்கி உடைந்து அழுதுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அப்போது பேசிய மணிமேகலை "நான் 8 வருஷம் Anchor-ஆ தான் இருந்தேன். ஒரு காமெடி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைச்சப்ப, இவங்க Anchor, லீட் கொடுப்பாங்க, லிங்க் கொடுப்பாங்க, இவங்க perform பண்ண விட்டா எப்படி பண்ணுவாங்கனு ஏளனமா பேசுனாங்க. ஆனா, இப்போ மணிமேகலை சூப்பரா performer-ஆ பண்ணுவாங்க, அவங்களுக்கு Anchoring வருமா என சொல்ற அளவுக்கு இப்போ மாறி இருக்கு. உழைச்சா எது வேணா செய்யலாம்" என கண்கலங்கி பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
Mani you are strong girl. Love you ❤️😍
— Twinkle ❤️ (@twinkletwins30) March 15, 2025
I am loving Mani and Master bond 🥹🥰#ManiMegalai @iamManimegalai pic.twitter.com/hfL9MQaY2M