தொகுப்பாளினி வேலை வேணாம்னு சொல்ல வச்சாங்க.. பிரச்சனைக்கு பின் நடந்ததை கூறிய மணிமேகலை
VJ மணிமேகலை
தொகுப்பாளினி மணிமேகலை சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து பணிபுரிந்து வந்தார்.
குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார். ஆனால், கடந்த குக் வித் கோமாளி சீசனில் இருந்து திடீரென இவர் வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கான காரணம் குறித்து மணிமேகலை வெளியிட்ட வீடியோ பெரும் பூகம்பதேயே கிளப்பியது என்று தான் சொல்லவேண்டும். இதை தொடர்ந்து பல விதமான சர்ச்சைகள் வெடித்த நிலையில், அதன்பின் அந்த பிரச்சனை அப்படியே அமைதியாகிவிட்டது.
மணிமேகலையின் பேச்சு
மேலும் விஜய் டிவியிலிருந்து வெளியேறிய மணிமேகலை, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் விருது விழா மேடை ஒன்றில் மணிமேகலை பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில் "எனக்கு பிடித்த தொகுப்பாளினி வேலையையே என் வாயலயே வேணாம்னு சொல்ல வச்சாங்க. அதே மாதிரி உங்க கரியரே முடிஞ்சிடுச்சுன்னு சொன்னாங்க. ஆனா அந்த பிரச்சனைக்கு அடுத்தே நாளே எனக்கு ஜீ தமிழ்ல வாய்ப்பு கிடைத்தது". என கூறியுள்ளார்.