பிக்பாஸ் 9ல் இருந்து வெளியேறிய பின் Vj பார்வதி எங்கே சென்றுள்ளார் பாருங்க... போட்டோ இதோ
பிக்பாஸ் 9
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் அதிகம் ரசிகர்களால் பார்க்கப்படும் ஒரு ஷோ பிக்பாஸ்.
கடந்த சில வருடங்களுக்கு முன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த ஷோ ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகி இப்போது 9வது சீசன் ஓடிக் கொண்டிருக்கிறது.
அக்டோபர் 5ம் தேதி கடந்த வருடம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் 9வது சீசன் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரப்போகிறது, இந்த சீசனை யார் ஜெயிப்பார் என்று தெரியவில்லை. ஆனால் ரசிகர்கள் இவர்களில் ஒருவர் ஜெயிப்பார் என கருதிய கானா வினோத், கம்ருதீன் என இருவருமே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.

பார்வதி
பிக்பாஸ் 9வது சீசன் மூலம் மக்களின் வெறுப்பை சம்பாதித்த பார்வதி Red Card வாங்கி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அதன்பின் பார்வதி சமூக வலைதளங்களில் தனக்கு ஆதரவாக பதிவு செய்த இன்ஸ்டா வீடியோக்களை தனது பக்கத்தில் பதிவிட்ட வண்ணம் இருந்தார்.

இந்த நிலையில் அவர் தனது அம்மா மற்றும் தோழியுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் பார்க்க வந்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
