Red Card வாங்கி வெளியேறிய பின் பிக்பாஸ் 9 குறித்து பார்வதி போட்ட பதிவு...
பிக்பாஸ் 9
விஜய் தொலைக்காட்சி என்றாலே ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரபலமானது.
இதில் பிக்பாஸ் 9வது சீசன் மிகவும் பரபரப்பின் உச்சமாக இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது, இந்த நேரத்தில் நிகழ்ச்சியில் இருந்து Red Card வாங்கி பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் வெளியே அனுப்பப்பட்டார்கள்.
இருவரும் வெளியேறியது குறித்து ரசிகர்கள், பிரபலங்கள் பல கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

பார்வதி
பிக்பாஸ் 9 வீட்டைவிட்டு வெளியேறிய பார்வதி மற்றும் கம்ருதீன் என்ன செய்யப்போகிறார்கள் என்று தான் மக்கள் எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் கம்ருதீன் பிக்பாஸ் 9 வெளியேறிய பின் எந்த சத்தமும் இல்லாமல் இருக்கிறார். ஆனால் பார்வதி அப்படி இல்லை, அவர் தனது இன்ஸ்டாவில் தனக்கு ஆதரவாக பலர் போட்ட பதிவுகளை ஷேர் செய்துவருகிறார்.

அவர் தான் உண்மையான வின்னர் என போடப்பட்ட பதிவுகளையும் அவர் ஷேர் செய்து வருகிறார்.