எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
எதிர்நீச்சல்
தமிழகத்தில் டாப் 5 சீரியல்கள் என பட்டியலிட்டால் அதில் இடம்பெறக்கூடிய தகுதி உடைய சீரியல் எதிர்நீச்சல். இயக்குநர் திரு. செல்வம் இயக்கி வரும் இந்த சீரியலில் பார்வதி, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, சபரி, கமலேஷ், வேல ராமமூர்த்தி என பலரும் நடித்து வருகிறார்கள்.

VJ பார்வதி
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் பார்வதி நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடிகை தேவயானியுடன் இணைந்து நடித்திருந்தார்.

அதுமட்டுமின்றி பல நிகழ்ச்சிகளை சன் டிவியில் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும், இவர் நடிப்பில் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் 'போலீஸ் போலீஸ்' என்கிற வெப் தொடர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க பார்வதி ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பார்வதி இந்த சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறாராம்.
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri
இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப் News Lankasri