நீங்க தானே எனக்கு ரெட் கார்டு வாங்கி கொடுத்தது.. முத்துகுமாரனை தாக்கிய VJ பார்வதி
பிக் பாஸ் 8ம் சீசன் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். தன்னுடன் பழகி எல்லாம் செய்துவிட்டு தற்போது ஏமாற்றிவிட்டார் என முத்துக்குமரன் மீது ஒரு பெண் புகார் அளித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அது பெரிய அளவில் வைரல் ஆக பரவி வருகிறது. பலரும் முத்துகுமாரனை விமர்சித்து வருகின்றனர்.

நீங்க தானே..
பிக் பாஸ் 9ம் சீசனில் சர்ச்சை போட்டியாளராக இருந்து ரெட் கார்டு மூலமாக வெளியேற்றப்பட்டவர் பார்வதி. அவர் தற்போது முத்துகுமாரனை தாக்கி பேசி இருக்கிறார்.
"இந்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் தானே பேசி எங்களுக்கு ரெட் கார்டு கொடுக்க வைத்தார். LOL. நல்ல தேர்வு. பிக் பாஸின் SCAM வின்னர்கள், மற்றும் நல்லவர்களாக காட்டிக்கொள்வதும் சூப்பர்" என பார்வதி விமர்சித்து இருக்கிறார்.