பிக்பாஸ் 6வது சீசனில் டைட்டில் ஜெயிக்கப்போவது யார்?- பிரியங்கா யாரை சொன்னார் தெரியுமா?
தொகுப்பாளினி பிரியங்கா
விஜய் தொலைக்காட்சியில் இப்போது நிகழ்ச்சிகளை அதிகம் தொகுத்து வழங்கி வருபவர்களில் ஓருவர் பிரியங்கா.
எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் மிகவும் கலகலப்பாக நடத்துவார், அவருக்காகவே நிகழ்ச்சிகளை பார்க்கும் மக்கள் உள்ளார்கள்.
தற்போது ஊ சொல்றியா ஊஊ சொல்றியா, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
பிக்பாஸ் 6 வின்னர்
இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொகுப்பாளினி பிரியங்காவிடம் இந்த பிக்பாஸ் 6வது சீசனில் ஜெயிக்கப்போவது யார் என கேட்டுள்ளனர். அதற்கு பிரியங்கா, விக்ரமன் ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது.
அவர் எல்லா விஷயத்திலுமே தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். அதனால் அவர் தான் வெற்றி பெறுவார் என நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார். பிரியங்கா பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.
தொகுப்பாளினி ரம்யாவின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க