ஒரு எபிசோட் தொகுத்து வழங்க தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே வாங்கும் சம்பளம்- எவ்வளவு தெரியுமா?
பிரியங்கா
விஜய் தொலைக்காட்சி என்றாலே சீரியல்களை விட முதலில் நிகழ்ச்சிகள் தான் நியாபகம் வரும்.
அந்த அளவிற்கு பாடல், நடன நிகழ்ச்சிகள் மூலம் டாப் டிவி லிஸ்டில் இடம்பெற்றது விஜய்.
தற்போது பல வருடங்களுக்கு பிறகு விஜய் டிவி ஜோடி நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது, அதில் யார் யார் ஜோடி சேர போகிறார்கள் என்பதை காண ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.
இந்த புதிய நிகழ்ச்சியை தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இல்லை. ஏனெனில் விஜய் டிவியின் செல்லக்குட்டியாக பிரியங்கா இருக்கிறார், எந்த நிகழ்ச்சி எடுத்தாலும் வந்துவிடுகிறார்.
சம்பள விவரம்
இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா குறித்து ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது.
அதாவது விஜய்யில் நிறைய ஷோக்கள் தொகுத்து வழங்கும் பிரியங்கா ஒரு எபிசோடுக்கு ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.