தொகுப்பாளர் ரக்ஷனுக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?- முதன்முறையாக அவரே வெளியிட்ட வீடியோ
தொகுப்பாளர் ரக்ஷன்
கலக்கப்போவது யாரு 5 சீசன் மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக களமிறங்கியவர் ரக்ஷன்.
இவர் தொகுப்பாளினி ஜாக்குலினுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வந்தார். முதல் சீசனிலேயே நன்றாக தொகுத்து வழங்கிய ரக்ஷன் அடுத்தடுத்த சீசன்களை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை தாண்டி மக்கள் கொண்டாடிய குக் வித் கோமாளி இதுவரை ஒளிபரப்பான அனைத்து சீசன்களையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு கலக்க வந்த கலைஞர்கள் லிஸ்டில் ரக்ஷனும் உள்ளார், இவரும் சில படங்கள் நடித்திருக்கிறார்.
மகளின் போட்டோ
தொகுப்பாளராக கலக்கிக்கொண்டிருந்த ரக்ஷனுக்கு திருமணம் ஆகவில்லை என்று பலரும் நினைத்திருந்தார்கள்.
ஆனால் அவருக்கு திருமணம் நடந்து ஒரு மகள் கூட உள்ளாராம்.
இன்று அவர் முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை அழகிய வீடியோவாக எடிட் செய்து பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா என அனைவரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
