தொகுப்பாளினி ரம்யாவா இது கொஞ்சம் குண்டாக, 16 வருடத்திற்கு முன் எப்படி உள்ளார் பாருங்க- அடையாளமே தெரியலையே?
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் ரம்யா. அவ்வளவாக நிறைய நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கவில்லை என்றாலும் சில ஷோக்கள் செம ஹிட்.
தொடர்ந்து தொகுப்பாளர் பணியை தொடர்வார் என்று பார்த்தால் அவரது டிராக் அப்படியே மாறியுள்ளது. Fitness பற்றிய விஷயங்களை கையில் எடுத்து அதில் நிறைய பேருக்கு உதவியும் வருகிறார்.
உடல் எடையை குறைக்க சாப்பிட வேண்டியது, உடற்பயிற்சி என எப்போதும் வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
தற்போது தான் 16 வருடத்திற்கு முன் எடுத்த புகைப்படத்தையும் இப்போது உள்ள போட்டோவையும் பதிவிட்டு தனது பழைய நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
அவரது பழைய போட்டோவை பார்த்த ரசிகர்கள் அட நம்ம தொகுப்பாளினி ரம்யாவா இது கொஞ்சம் குண்டாக எப்படி இருந்துள்ளார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.