ஒரே நாளில் 2 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்- செம டிப்ஸ் கொடுக்கும் தொகுப்பாளினி ரம்யா
ரம்யா
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு டாப் தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் ரம்யா.
நிறைய நிகழ்ச்சிகளை மிகவும் அழகாக தொகுத்து வழங்கி வந்தவர் ஒரு கட்டத்தில் அவர் தனது டிராக்கை மாற்றி உடல்பயிற்சி, Heavy Lift பக்கம் கவனம் செலுத்தி வந்தார்.
இப்போது முழுநேரமாக உடற்பயிற்சி குறித்தும், டயட் குறித்தும் நிறைய வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.
ஒருசில சமயங்களில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி பிஸியாக இருந்து வருகிறார்.
டயட் பிளான்
இந்த நிலையில் தொகுப்பாளினி ரம்யா ஒரே நாளில் 2 கிலோ வரை உடல் எடை குறைப்பது எப்படி என சில டிப்ஸ் கொடுத்துள்ளார். அதில் அவர், மனித உடலில் 60 விழுக்காட்டுக்கும் மேல் தண்ணீரால் நிரம்பியது. இதில் நாம் அதிகமாக சாப்பிடும் போது சில மாற்றம் ஏற்படும்.
அதாவது குடிக்கும் தண்ணீரின் அளவு, உடலில் இருந்து வெளியேறும் சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் இழக்கும் தண்ணீரை பொறுத்து உடலில் தண்ணீர் அளவுகள் மாறும். கார்போஹைட்ரேட் உணவு மற்றும் அதிகளவு உப்பு உடலில் இருந்தால் தண்ணீர் தங்கிவிடும்.
அதே போல பொட்டாசியம் குறைபாடும் உடலில் நீர் எடையைக் அதிகரிக்கும். அந்த வகையில் நீர் எடையை ஒரே நாளில் இரண்டு கிலோ குறைப்பதற்கான வழிகளை விஜே ரம்யா பகிர்ந்துள்ளார்.
வயிறு உப்புசமாக காணப்பட தூக்கமின்மை, மன அழுத்தம், அதிக உப்பு உட்கொள்ளல், தண்ணீர் கம்மியாக குடிப்பது போன்ற காரணங்கள் உடல் எடைக்கு முக்கிய காரணங்கள். குப்பை உணவுகள், பாஸ்ட் புட்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவு சாப்பாடு என அனைத்தும் தவிர்க்க வேண்டியவை.
கீரை, அவகேடோ, வாழைப்பழம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற உணவுகளை சாப்பிடவும். உடலில் சோடியம் அளவு சீராக இருந்தால் உப்புசம் பிரச்சினை வராது. தண்ணீர் அதிகம் குடியுங்கள்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்காத போது தான் உடலில் தண்ணீர் இல்லை என ஹார்மோன்கள் தண்ணீரை சேமிக்க தொடங்கும். தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் இது போன்ற பிரச்சினை ஏற்படாது.
தண்ணீர் அதிகம் குடித்தால் சருமமும் பளபளப்பாக இருக்கும் என கூறியிருக்கிறார்.