Ai தொழில்நுட்பத்தால் தொகுப்பாளினி ரம்யாவிற்கு நேர்ந்த விஷயம்.. இனிமேல் அவ்வளவுதான், பிரபலத்தின் பதிவு
Vj ரம்யா
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் ரம்யா.
நடன நிகழ்ச்சி, ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் என பல தொகுத்து வழங்கியவர் நிறைய தனியார் நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
அதேபோல் ஓகே கண்மணி உட்பட நல்ல கதாபாத்திரத்துடன் வாய்ப்பு கிடைக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.
கோபமான பதிவு
இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாவில் கோபமான பதிவு ஒன்று போட்டுள்ளார். தொழில்நுட்பத்தில் புதிய விஷயம் வந்தால் அது நல்ல விஷயங்களுக்கு எவ்வளவு பயன்படுகிறதோ அதேபோல் கெட்ட விஷயங்களுக்காகவும் பயன்படுகிறது.
அப்படி AI தொழில்நுட்பத்தால் ஆபாசமாக மாற்றுவது, குரல்களில் மாற்றம் செய்து வெளியிடுவது என அதிகரித்து வருகிறது. தற்போது தொகுப்பாளினி ரம்யாவின் வீடியோவும் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரம்யா, இது மூன்றாவது தடவை என்னுடைய வீடியோ ஏஐ மூலம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இது உண்மையில் சட்டத்திற்கு புறம்பானது. என்னுடைய தனிப்பட்ட உரிமைகளை மீறும் வகையில் மோசடியான செயல்.
அதை இப்போதே நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என அந்த வீடியோவை பகிர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu
