ச்சி இவ மூஞ்சிலையே முழிச்சேன்! நாளே விளங்காது - அழகு சீரியல் நடிகை சங்கீதாவிற்கு நடந்த அவமானம்
வி.ஜே.சங்கீதா
சன் மியூசிக்கில், நிகழ்ச்சி தொகுப்பாளர் வளம் வந்தவர் தான் வி.ஜே.சங்கீதா. இந்த தொலைக்காட்சியில் செந்தமிழ் பெண்ணே, பிறந்தநாள் வாழ்த்துக்கள், 24 ப்ரேம்ஸ், ஃபிராங்கா சொல்லட்டா மற்றும் லேடீஸ் சாய்ஸ் போன்ற பிரபலமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மேலும் இவர் வானிலை ஆய்வாளராகவும் பணியாற்றினார். "அழகு" சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதில் முதலில் துணை நடிகையாக முக்கிய கதாபாத்திரம் கொடுக்கபட்டு பிறகு சில நாளில் வில்லி ரோலாக மாற்றியமைக்கப்பட்டது.
இதனை அடுத்து தொடர்ச்சியாக "தமிழும் சரஸ்வதியும்", "அன்பே வா" தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
சங்கீதாவிற்கு நடந்த அவமானம்
இதில் சங்கீதா ஒரு முறை கோவிலுக்கு சென்ற போது, கோவிலில் ஒரு பெண் தன் கணவரிடம், ச்சி இவ மூஞ்சில முழிச்சேன் நாளே விளங்காது என சங்கீதா முன் கூறி அங்கிருந்து சென்றுவிட்டாராம்.
இதனை பேட்டியில் சொன்ன சங்கீதா "நடிகையாக நான் என்ன செய்ய வேண்டுமோ அதை தான் செய்தேன். என்னை வில்லியாக பார்த்து வெறுத்தவர்கள் உண்டு, எனது நடிப்பை பாராட்டியவர்களும் உண்டு".
இந்த அவமானம் வாழ்வில் என்னால் மறக்க முடியாது, இருப்பினும் சிலர் செலுத்தும் அன்பை நினைத்து நான் என் மனதை அமைதிப்படுத்தி கொள்வேன் என கூறியிருக்கிறார்.
மூன்று வாரங்களில் குட் நைட் திரைப்படம் செய்த வசூல்.. மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை