அஜித்துடன் அது நடந்தால், அடுத்த நாள் ஊருக்கு போய்டுவேன்.. பிரபலம் கூறிய ஷாக்கிங் தகவல்
அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் வெளிவந்த நிலையில், GBU மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம், அஜித்தின் கரியர் பெஸ்ட் திரைப்படமாக அமைந்துள்ளது. இதனால், மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கைகோர்த்துள்ளார் அஜித். இப்படத்திற்கான முதற்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜே சித்து
Youtube மூலம் பிரபலமானவர்களின் ஒருவர் விஜே சித்து. முதலில் பிராங்க் செய்து ரசிகர்களை கவர்ந்த இவர், பின் விஜே சித்து vlogs மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்து விட்டார். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி இந்த ஆண்டு வெளிவந்த டிராகன் படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் சித்து நடித்திருந்தார்.
அடுத்ததாக ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் உருவாகும் டயங்கரம் படத்தை சித்து இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். விஜே சித்து Vlogs-ல் அனைவருக்கும் மிகவும் பிடித்தது படங்களின் ப்ரோமோஷன் நடக்கும் மொட்ட மாடி பார்ட்டிதான்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் விஜே சித்து கலந்துகொண்ட நிலையில், அஜித்துடன் இந்த மொட்ட மாடி பார்ட்டி நடந்தால் எப்படி இருக்கும் என கேள்வி கேட்டனர். அஜித்தின் தீவிர ரசிகரான விஜே சித்து, "அது மட்டும் நடந்தால், அடுத்த நாளே ஊருக்கு பஸ் பிடுச்சு போய்டுவேன். வாழ்க்கை பலனை அடைந்த மாதிரி பீல் பண்ணுவேன்" என சித்து கூறியுள்ளார்.

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
