பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகியது ஏன், என்ன பிரச்சனை... வைரலாகும் விஷால் சொன்ன விஷயம்
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒருகாலத்தில் டிஆர்பியில் டாப்பில் இருந்த தொடர் பாக்கியலட்சுமி.
பாக்கியா என்ற பெண்ணை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் இப்போது பரபரப்பான கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.
அதாவது உடல்நிலை முடியாமல் பாக்கியாவிற்கு போன் செய்தார் கோபி, அவரும் தனது முன்னாள் கணவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிவிட்டார்.
இதுநாள் வரை இவன் என் மகனே கிடையாது என கூறி வந்த கோபியின் அம்மா ஈஸ்வரி இப்போது அப்படியே மகன் மீது பாசத்தை காட்டி பாக்கியா எதிர்த்தும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இனி ராதிகா, அவரது அம்மா என்ன செய்யப்போகிறார், எப்படி பிரச்சனை வெடிக்கும் என்பது தெரியவில்லை.
விஜே விஷால்
இந்த தொடர் ஆரம்பத்தில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே விஷால். இவர் திடீரென தொடரில் இருந்து விலகியிருந்தார், ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது.
தற்போது அவர் பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்டு நன்றாக விளையாடி வருகிறார். இந்த நிலையில் விஜே விஷால், திடீரென பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறியது குறித்து எப்போதோ ஒரு பேட்டி கொடுக்க அது இப்போது வெளியாகியுள்ளது.
கல்லூரி முடித்துவிட்டு சினிமா பற்றி ஒன்றுமே தெரியாதவனாக இருந்தேன், அப்போது பாக்கியலட்சுமி வாய்ப்பு கிடைத்தது. நான் எல்லோருக்கும் தெரிகிறேன் என்றால் அது எழில் கதாபாத்திரம் கொடுத்தது தான்.
அவ்வளவு பெரிய வாய்ப்பு ஏன் விட்டேன் என்றால் சம்பளம் வாங்கிக்கொண்டு அதே வேலையை செய்வதாக தோன்றியது, ஒரு Satisfaction இல்லாமல் இருந்தது, அதனால் தான் இந்த முடிவு என கூறியிருக்கிறார்.