விஜய் சேதுபதி நடிக்கும் வெப் சீரிஸுக்கு எதிர்ப்பு! கடும் கோபத்தில் ரசிகர்கள்
இயக்குனர்கள் ராஜ் மற்றும் DK இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் தமிழகத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பியது.
மேலும் அதில் நடிகை சமந்தா நடித்திருந்த கதாபாத்திற்கு பலரும் இணையத்தில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தி பேமிலி மேன் இயக்குனர்கள் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபத்தில் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி பிரமுகர் இடும்பாவனம் கார்த்திக், விஜய் சேதுபதியை கண்டித்துள்ளார்.
"தி பேமிலி மேன் 2 தொடர் மூலம் புலிகளைக் கொச்சைப்படுத்தி, உலகெங்கும் வாழும் தமிழர்களைக் காயப்படுத்திய அயோக்கியர்களோடு கொஞ்சிக்குலவ எப்படி முடிகிறது? வெட்கமின்றி மக்கள் செல்வன் என சுய தம்பட்டம் அடிக்க எப்படி முடிகிறது? கொஞ்சமேனும் நன்றியோடு இருங்க விஜய் சேதுபதி" என கூறியுள்ளார்.
மேலும் இதனால் கடுப்பான விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அவரை எதிர்த்து கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
Makkal Selvan in da house! #pppaaaa #kumudhahappyannachi pic.twitter.com/IjBYpMluQU
— Raj & DK (@rajndk) August 1, 2021