பெருமாள் பிச்சை, சனியன் சகடைக்கு குரல் கொடுத்தது யார் தெரியுமா? அந்த மிரட்டலான குரலுக்கு சொந்தக்காரர்!
நடிகர் விஜய்யின் படங்கள் என்றால் அதிரடி இல்லாமல் இருக்காது. சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சமில்லை. வில்லன்களும் வேற லெவலில் இருப்பார்கள்.
அவரின் படங்களில் திருப்பாச்சி படத்தை மறக்க முடியுமா என்ன. இதில் சனியன் சகடை என்ற வில்லனாக நடித்தவர் கோட்டா சீனிவாச ராவ். அவரின் தோற்றம் செம மிரட்டலாக இருந்ததை காணமுடிந்தது.
தெலுங்கு சினிமாவில் 100க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் இவருக்கும் தமிழில் முதல் படம் சாமி. விக்ரமுக்கு வில்லனாக அரசியல் வாதி பெருமாள் பிச்சை கேரக்டர் மிரட்டியிருந்தார்.
அவரின் குரல் தான் படங்களில் மாஸ். அந்த குரல் அவரின் உண்மை குரல் என்றே பலரும் நினைத்து வருகிறார்கள். ஆனால் அந்த குரலுக்கு சொந்தக்காரர் சீரியல், சினிமா நடிகை ஸ்ரீலேகாவின் கணவர் ராஜேந்திரன் தானாம்.
அஜித், விஜய், விஷால், விக்ரம் என பலருக்கும் வில்லனாக கோட்டா ஸ்ரீனிவாச ராவ் நடித்துள்ள அவர் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri