வருத்தப்படா வாலிபர் சங்கம் பட புகழ் நடிகர் திடீர் மரணம்- தகவல் வெளியிட்ட இயக்குனர்
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் மரண செய்திகள் அதிகம் வருகின்றன. கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, குட்டி ரமேஷ் என நிறைய கலைஞர்களின் மரண செய்திகள் வர மக்கள் கடும் சோகத்தில் ஆழ்த்திருக்கின்றனர்.
மக்களும் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளை நாடுகின்றனர், அங்கேயும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க சிலர் ஆம்புலன்ஸிலேயே காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் நடிகரின் மரண செய்தியை கூறியுள்ளார் இயக்குனர் பொன்ராம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் போன்ற படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளாராம்.
#RIPPawnraj வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள் pic.twitter.com/uxOdKTHp2z
— ponram (@ponramVVS) May 15, 2021