வசூலில் அடிவாங்கிய வார் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
வார் 2
யாஷ் ராஜ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வார் 2. இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியைடைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவானது.
இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், அவர்களுடைய எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
பாக்ஸ் ஆபிஸ்
இதனால் வசூலில் தடுமாறிவருகிறது வார் 2. இந்த நிலையில், 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் வார் 2 இதுவரை செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 280 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான வசூல் என்று பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.