War Machine திரை விமர்சனம்

Report

ஹாலிவுட் திரையுலகில் ஆக்‌ஷன் படங்களுக்கு பஞ்சமே இருக்காது, அந்த வகையில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் Patrick Hughes இயக்கத்தில் ஆலன் ரிட்சன் நடிப்பில் வெளிவந்துள்ள வார் மிஷின் எப்படி? பார்ப்போம்.

War Machine திரை விமர்சனம் | War Machine Movie Review

கதைக்களம்

ஆலன் ஒரு மிலிட்ரி இன்ஜினியர், போர் நேரத்தில் பழுதாகும் கார் மற்றும் இதர கோளாருகளை சரி செய்து வருகிறார், அப்படி தன் தம்பி(அவரும் போர் வீரர்) குழு வந்த வாகனம் ரிப்பேர் ஆகிறது. இதை ஆலன் சரி செய்யும் போது தாலிபான் தாக்குதல்களில் அந்த குழுவே இறக்கிறது, ஆலன் தன் சகோதரனை தோளில் சுமந்து ஓடுகிறார், காப்பாற்ற அப்படியும் அவர் இறக்கிறார்.

தன் தம்பியின் ஆசையான ரேஞ்சர் ஆக வேண்டும் என்பதை தான் நிறவேற்ற வேண்டும் என ரேஞ்சர் ட்ரெயினிங் செல்கிறார், அங்கு மிக கஷ்டமான ட்ரெயினிங் அவருக்கு கொடுக்கப்படுகிறது.

War Machine திரை விமர்சனம் | War Machine Movie Review

எல்லா ட்ரெயினிங்கிலும் தேர்ச்சி பெற்று, கடைசியா ஒரு குழு ரெடியாக அதற்கு அவர் தலைவரும் ஆகிறார், கடைசி ட்ரெயினிங் ஒன்றில் வழி தவறி இந்த குழு வேறு இடத்துக்கு செல்கிறது.

அங்கு வேற்று கிரகத்தை சார்ந்த ஒரு ஹை டெக்னாலாஜி கொண்ட மிஷின் களம் இறங்கி இவர்களை வேட்டையாட, அதிலிருந்து யார் யார் தப்பித்தார்கள் , அந்த மிஷினை அழித்தார்கள என்பதே மீதிக்கதை.

War Machine திரை விமர்சனம் | War Machine Movie Review

படத்தை பற்றிய அலசல்

வார் மிஷின் இந்த மாதிரி படங்கள் ஹாலிவுட்டில் ஆயிரக்கணக்கில் வந்துள்ளது, வேற்று கிரகவாசி உலகை அழிக்க வருகிறான், அதை காப்பாற்ற வேண்டும் என்பது போல், அதே கடைந்து எடுத்த பழைய பார்முலா.

ஆனால், இதில் எந்த ஒரு அநாவசிய பேச்சு இல்லாமல், ஆரம்பத்தில் தம்பியை இழந்த ஆலன் அதிலிருந்து மீண்டு வர ரேஞ்சர் ஆக போராடும் எமோஷன், பிறகு அந்த மிஷினிடம் மாட்டிக்கொண்டு தன் குழுவை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சிகள் என அடுத்தடுத்து பரபரப்பை நோக்கியே செல்கிறது.

War Machine திரை விமர்சனம் | War Machine Movie Review

தடயம் வெப் சீரிஸ் எப்படியிருக்கு? விமர்சனம்

தடயம் வெப் சீரிஸ் எப்படியிருக்கு? விமர்சனம்

அதிலும் மிஷின் ஆற்றுப்பகுதியில் இவர்களை துரத்தும் போது அங்கிருந்து தப்பித்து, ஒரு கார்-யை ரெடி செய்து, பிறகு அந்த கார்-யை அந்த மிஷின் துரத்துகிறது, அதிலிருந்தும் அவர்கள் தப்பிக்க போராடும் இடமெல்லாம் சரவெடி விருந்து ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு.

ஆனால், இத்தனை ஆக்‌ஷன் இருந்தாலும் இது கிட்டத்தட்ட அர்னால்ட் நடித்த பிரிடேட்டர் படத்தின் சாயல் தான், அர்னால்ட் தன் குழுவுடன் அந்த பிரிடேட்டரிடமிருந்து எப்படி தப்பிப்பார் என்ற பதட்டம் நமக்கும் இருக்கும், அந்த பதட்டம் இந்த படத்தில் துளி கூட இல்லை. இதுவே படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக உள்ளது.

War Machine திரை விமர்சனம் | War Machine Movie Review

வெறும் ஆக்‌ஷனை நம்பி மட்டுமே எடுத்த இயக்குனர், கொஞ்சம் பதட்டம், படபடப்பு சேர்த்து இருந்தால் இதையும் நாம் பிரிடேட்டர் அளவுக்கு கொண்டாடி இருக்கலாம். டெக்னிக்கலாக சிஜி ஒர்க், ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் பிரமாதம்.

க்ளாப்ஸ்

ஆக்‌ஷன் காட்சிகள்

பல்ப்ஸ்

எந்த ஒரு பதட்டமும் இல்லாமல், பெரிய திருப்பம் இல்லாமல் செல்லும் காட்சிகள்.

மொத்தத்தில் இந்த வார் மிஷின், கண்டிப்பாக இந்த மிஷன் சக்சஸ் தான், ஆனால் ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு மட்டுமே...

War Machine திரை விமர்சனம் | War Machine Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US