தனுஷ் நிஜமாகவே ஏழையாக இருந்தாரா? குடும்பத்தை பற்றி உண்மையை சொன்ன மூத்த நடிகர்
தனுஷ் சமீபத்தில் நடந்த இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது தான் சின்ன வயதில் தினமும் இட்லி சாப்பிட வேண்டும் என ஆசை இருக்கும், ஆனால் அதற்கு பணம் இருக்காது என கூறி இருப்பார்.
மேலும் காலையில் வேலை செய்து கிடைக்கும் 2.5 ரூபாயை கொண்டு சென்று கடையில் இட்லி வாங்கி சாப்பிடுவேன் எனவும் தனுஷ் கூறி இருந்தார்.
தனுஷின் அப்பா பெரிய இயக்குனர், ஆனால் தனுஷ் இப்படி ஏழை என சொல்கிறாரே என நெட்டிசன்கள் அவரை விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.
விசு பேட்டி
தனுஷ் குடும்பம் எப்படி இருந்தது என இயக்குனரும் நடிகருமான விசு உயிருடன் இருந்த போது கொடுத்த பேட்டி தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா தன்னிடம் 15 படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியதாகவும், அப்போது சென்னையில் கண்ணம்மாபேட்டை அருகில் அவரது குடும்பம் வசித்து வந்தது எனவும் கூறியுள்ளார்.
அந்த நேரத்தில் அவர்கள் வீட்டில் டிவி கூட இருக்காது. தனுஷ், செல்வராகவன், இரண்டு சகோதரிகள் என எல்லோரும் விசுவின் சகோதரர் வீட்டில் தான் டிவி பார்க்க போவார்களாம்.
விசு சொல்வதை பார்க்கும்போது தனுஷ் சின்ன வயதில் வறுமையில் இருந்ததாக சொன்னது உண்மை தான் என உறுதியாகி இருக்கிறது.