40 நாள் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்ததற்காக Watermelon திவாகர் எவ்வளவு சம்பாதித்தார் தெரியுமா?.. அடேங்கப்பா இத்தனை லட்சமா?
பிக்பாஸ் 9
பிக்பாஸ் 9, படு சூடாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி ஷோ.
20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த ஷோவில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் ஆகி திடீரென 4 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட்டு என்ட்ரி கொடுக்க பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
8 சீசன் ஒளிபரப்பாகி விட்டது இந்த 9வது சீசன் போல் மோசமான சீசன் எதுவும் இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். விஜய் சேதுபதியும் ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சிக்கு வரும் போது மோசமாக நடந்து கொள்கிறீர்கள் என கூறுகிறார், ஆனால் யாரும் கேட்பது போல் தெரியவில்லை.

திவாகர்
கடந்த சில வாரங்களாக பிக்பாஸ் 9 வீட்டில் டபுள் டபுள் எவிக்ஷன் நடந்து வருகிறது.

இந்த வாரம் கனி மற்றும் Watermelon திவாகர் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்கள். 40 நாள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி ரூ. 4 லட்சம் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த வீட்டில் பார்வதி சொல்லும் சொல்லுக்கு தலையை ஆட்டிக் கொண்டு இருப்பவராக இருந்த திவாகர் ரீல்ஸ் செய்யும் போதும், பாட்டில் டாஸ்க்கின் போது மட்டுமே தனியாக தெரிந்தார்.
பிக்பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் என மொத்தமாக 40 நாட்களுக்கு திவாகருக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.