எனக்கு மக்களிடம் ஆதரவு உள்ளது, பிக்பாஸ் 9 எலிமினேஷனுக்கு பிறகு திவாகர் வெளியிட்ட வீடியோ...
பிக்பாஸ் 9
பிக்பாஸ், சினிமாவில் சாதிக்க துடிக்கும் ஒரு கலைஞனுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் பெரிய மேடையாக தான் உள்ளது.
கடந்த அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் 9வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது, இதில் மக்கள் பார்த்து பழகிய பிரபலங்களும், சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களும், சில புதிய முகங்களும் கலந்துகொண்டார்கள்.

அடுத்தடுத்த அதிரடியாக பிக்பாஸ் ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறார். வாரா வாரம் டபுள் எவிக்ஷனாக செய்து பார்வையாளர்களுக்கு என்னடா இது என ஷாக் ஆக வைக்கிறார்.
அப்படி கடந்த வாரம் பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியவர் தான் வாட்டர் மெலன் திவாகர். 42 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்காக ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரம் என மொத்தமாக ரூ. 5 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வீடியோ
வாட்டர் மெலன் திகாவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது குறித்து ரசிகர்கள் பலரும் சரியான முடிவு என கூறி வருகின்றனர். இந்த நிலையில் திவாகர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், என்னை குறிவைத்து பொய்யான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. நான் பொதுவாக சொல்லிய சில கருத்துகள் என்மீது அவதூறாக பரப்பப்படுகின்றன.
ஒருவர் சோஷியல் மீடியாவில் வளரும்போது இத்தகைய குற்றச்சாட்டுகள் வருவது சாதாரணம். இந்த பிரச்சனையில் என்னை பலிகாடா ஆக்க முயற்சிப்பது சாத்தியமே இல்லை, எனக்கு மக்களிடையே ஆதரவு இருக்கிறது என பேசியுள்ளார்.