விரைவில் நடிகை பார்வதி நாயருக்கு டும் டும் டும்.. நிச்சயதார்த்த புகைப்படங்கள் இதோ
பார்வதி நாயர்
கல்லூரி படிக்கும் போதே மாடலிங் துறையில் களமிறங்கி 2012ம் ஆண்டு Poppins என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
மலையாளம், கன்னடம் என தொடர்ந்து படங்கள் நடித்துவந்தவர் கடந்த 2014ம் ஆண்டு ரவி மோகன் நடித்த நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அப்படத்தை தொடர்ந்து 2015ம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லன் அருண் விஜய்க்கு ஜோடியாக துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்தார்.
மேலும் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி போன்ற படங்களில் நடித்தவர் கடைசியாக விஜய்யின் கோட் படத்தில் நடித்திருந்தார்.
திருமணம்
பிஸியாக படங்கள் நடிப்பதும், போட்டோ ஷுட்கள் நடத்துவதும் என பிஸியாக இருந்த பார்வதி நாயருக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
பார்வதி நாயர் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.