முக்கிய நடிகரின் மகளுக்கு திருமணம் முடிந்தது, வெளியான அழகான திருமண புகைப்படங்கள்..இதோ.
நடிகர் ரமேஷ் அரவிந்த் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கியவர், இவர் தமிழ் சினிமாவிற்கு மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார், குறிப்பாக பஞ்சதந்திரம், சதிலீலாவதி, ஜோடி, ரிதம், டூயட் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம்.
கடைசியாக இவர் கமல் நடிப்பில் வெளியான உத்தம வில்லன் திரைப்படத்தில், ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார்.
இந்நிலையில் இன்று அவரின் மகள் நிஹாரிகாவுக்கு அக்ஷய் என்பவருடன் திருமணமாகி உள்ளதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார் நடிகர் ரமேஷ் அரவிந்த்.
My daughter Niharika got married to Akshay today..We seek your blessings and best wishes???? pic.twitter.com/7BwDHOAog5
— Ramesh Aravind (@Ramesh_aravind) December 28, 2020