விஜய் டிவி-சன் டிவிக்கு வாரா வாரம் நடக்கும் போட்டி.. டிஆர்பியில் மாஸ் காட்டியது யார்?
வாரா வாரம் திரையரங்குகளில் ஒரு படம் ரிலீஸ் ஆக அவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கிறது.
ஏன் இன்று கூட வெளியாக இருந்த விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் வெளியாவதாக இருந்து பிரச்சனையை சந்தித்துள்ளது.
ஆனால் தொலைக்காட்சியில் அப்படி ஒன்றும் இல்லை, வாரா வாரம் ஆனால் ஹிட்டாக ஓடிய அதாவது பார்வையாளர்களின் வரவேற்பு பெற்ற தொடர்களின் விவரம் வெளியாகி விடுகிறது.
அப்படி 11ம் வாரத்தில் ஒளிபரப்பான தொடர்களின் டாப் 5 இடம் பிடித்த தொடர்களின் விவரத்தை காண்போம்.
சிங்கப்பெண்ணே
ஆனந்தி யாரை காதலிக்கிறார் என்ற பிரச்சனை சென்று மகேஷ்-அன்பு மீது கோபப்பட்ட கதைக்களம் தான் ஒளிபரப்பானது. களவரமான கடந்த வார கதைக்களத்தால் சிங்கப்பெண்ணே நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
கயல்
கயலின் தங்கை தன்னை பிரசவத்தின் போது கூட வந்து பார்க்காத கணவருக்கு செம மாஸ் கேள்வி கேட்டு விவாகரத்து கொடுத்த கதைக்களம். டிஆர்பியில் தொடர் 2ம் இடத்தை பிடித்திருக்கிறது.
மூன்று முடிச்சு
சுற்றி சுற்றி நந்தினிக்கு பிரச்சனை ஏற்பட்டாலும் சூர்யாவுடனான இவரது காட்சிகளுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்து வருகிறது.
மருமகள்
ஆதிரை தனது அப்பாவை சித்தி கொடுமைப்படுத்துவதால் அவரையே கை ஓங்கிய கதைக்களம், இது 4வது இடத்தில் உள்ளது.
சிறகடிக்க ஆசை
பரசுவின் மகள் கல்யாண எபிசோட் சென்றது, இந்த வாரம் தான் அதிரடி கதைக்களமாக உள்ளது.