அடி பாதாளத்திற்கு செல்லும் விஜய் டிவி சீரியல் டிஆர்பி.. கெத்து காட்டும் சன் டிவி சீரியல்கள், முழு விவரம்
சீரியல்கள்
வெள்ளித்திரையில் குறிப்பிட்ட நடிகர்களின் ரசிகர்கள் தான் பாக்ஸ் ஆபிஸ் சண்டை போடுவார்கள்.
ஆனால் இப்போது அந்த பாக்ஸ் ஆபிஸ் சண்டைகள் கூட குறைந்துவிட்டது எனலாம். இப்போது சின்னத்திரையிலும் ஒரு சண்டை நடக்கிறது, வேறு என்ன டிஆர்பி சண்டை தான்.
இந்த டிஆர்பி சண்டை பல வருடங்களாக இரண்டே பேருக்கு தான் நடந்துகொண்டே வருகிறது. சன் மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான் டிஆர்பியில் சண்டை போட்ட வண்ணம் உள்ளனர், இந்த லிஸ்டில் ஜீ தமிழ் இன்னும் வரவில்லை.
32வது வாரம்
கடந்த வாரம் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப் 5 இடத்தை பிடித்த தொடர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
எப்போது டாப் 5ல் விஜய் டிவியின் ஒரு தொடர் இடம்பெற்றுவிடும், ஆனால் இந்த முறை 7வது இடத்தில் இருந்து தான் விஜய் டிவி சீரியல்கள் இடம் பிடித்துள்ளன.
டாப் 5 இடத்தில் மொத்தமாக சன் தொலைக்காட்சி சீரியல்கள் தான் உள்ளது.
இதோ டாப் 10 விவரம்,
- சிங்கப்பெண்ணே
- மூன்று முடிச்சு
- கயல்
- எதிர்நீச்சல் தொடர்கிறது
- மருமகள்
- அன்னம்
- சிறகடிக்க ஆசை
- அய்யனார் துணை
- சின்ன மருமகள்
- இராமாயணம்