சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம்
சீரியல்கள்
பாராட்டு, ஒரு மனிதன் என்ன வேலை செய்தாலும் அதற்கு பாராட்டு கிடைத்தால் அவனின் சந்தோஷத்திற்கு எல்லையே இருக்காது.
அப்படி சினிமாவை எடுத்துக்கொண்டால் இப்போதெல்லாம் நாயகன்-நாயகி தாண்டி எல்லா கலைஞர்களுக்குமே மக்களிடம் பாராட்டு கிடைக்கிறது, அவர்களை இன்னமும் ஓட வைக்கிறது.
சின்னத்திரை எடுத்துக்கொண்டால் மக்களிடம் இருந்து தினமும் பாராட்டுக்கள் கிடைத்த வண்ணம் தான் உள்ளது. அதிலும் ஒரு சீரியல் கலைஞன் சந்தோஷப்பட முக்கியமாக அமைகிறது TRP.
வியாழக்கிழமை ஆனால் ஒவ்வொரு சீரியலுக்கும் மக்கள் எவ்வளவு ஆதரவு கொடுத்துள்ளார்கள் என்ற விவரம் வெளியாகிவிடும்.
டிஆர்பி விவரம்
35வது வாரத்திற்கான டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே விஜய் டிவி சீரியல்கள் டாப் 5ல் இறங்கிய வண்ணம் இருந்தது.
சன் டிவி தொடர்கள் டாப் 7 வரை ராஜ்ஜியம் செய்து வந்தனர்.
ஆனால் 35வது வாரத்திற்கான டிஆர்பியில் விவரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. டாப் 7ல் இருந்து வந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை இப்போது 3வது இடத்தை பிடித்துள்ளது.
இதோ டாப் 5 தொடர்களின் விவரம்,
- சிங்கப்பெண்ணே
- மூன்று முடிச்சு
- சிறகடிக்க ஆசை
- எதிர்நீச்சல் தொடர்கிறது
- கயல்