விட்ட இடத்தை பிடித்த சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள் நிலை... டிஆர்பி விவரம் இதோ
வாரா வாரம் வெள்ளிக்கிழமை என்றாலே வெள்ளிததிரையில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகிவிடும்.
படங்கள் ரிலீஸ் ஆனதும் பட கதை பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படும் ரசிகர்கள் அடுத்து பாக்ஸ் ஆபிஸ் விவரம் அரிய ஆர்வம் காட்டுவார்கள்.
அப்படி சின்னத்திரையில் வாரா வாரம் வியாழக்கிழமை என்றால் ஒரு விஷயம் வந்துவிடும், வேறென்ன டிஆர்பி விவரம் தான். எந்த தொடருக்கு மக்கள் அதிகம் ஆதரவு தருகிறார்கள், டாப் சீரியல் எது என வெளியாகும்.
வாரம் 36
பல வாரங்களாக சன் டிவி தொடர்கள் தான் டாப் 5ல் முதல் 4 இடத்தை பிடித்து வந்தன. 5வது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இடம்பெறும்.
ஆனால் கடந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியல் டாப் 3வது இடத்தை பிடித்திருந்தது, இந்த வாரமும் அதேபோல் வருமா என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தால் அப்படி நடக்கவில்லை.
அதாவது கடந்த வாரம் விட்டுக்கொடுத்த 3வது இடத்தை கைப்பற்றி மீண்டும் பழைய நிலைமைக்கு வந்துள்ளது சன் டிவி.
இதோ டாப் 5 சீரியல்களின் விவரம்,
- சிங்கப்பெண்ணே
- மூன்று முடிச்சு
- எதிர்நீச்சல் தொடர்கிறது
- கயல்
- சிறகடிக்க ஆசை