அடி பாதாளத்திற்கு செல்லும் விஜய் டிவி சீரியல்கள்.. கெத்து காட்டு சன் டிவி தொடர்கள். டிஆர்பி விவரம்
சீரியல்கள்
படங்கள் ஒரு வாரத்திற்கு ஒருமுறை தான் ரிலீஸ், ஆனால் தினமும் மக்களுக்கு ஒரு என்டர்டெயின்மென்டாக இருப்பது சீரியல்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் தான்.
மக்கள் கொண்டாடும் வகையில் சீரியல்களும் இப்போது அதிகம் வருகின்றன. சன் டிவி தொடர்ந்து டிஆர்பியில் குறைந்து வரும் தொடர்களை முடித்து புத்தம் புதிய சீரியல்களை களமிறக்குகிறார்கள்.
விஜய் டிவியும் தொடர்ந்து நிறைய சீரியல்களை முடிப்பதும், புதிய தொடர்களை களமிறக்குவதுமாக உள்ளார்கள்.
டிஆர்பி விவரம்
இந்த நிலையில் 42வது வாரத்திற்கான டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது. அதில் டாப் 5ல் கூட விஜய் டிவி தொடர்கள் வரவில்லை, சன் டிவி தான் கெத்து காட்டியுள்ளது.
இதோ டாப் 5 சீரியல்களின் லிஸ்ட்,
- கயல்
- மூன்று முடிச்சு
- சிங்கப்பெண்ணே
- மருமகள்
- சுந்தரி
டாப் 5ல் வந்துகொண்டிருந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 7வது இடத்தில் உள்ளது.