சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5ல் விஜய் சீரியல்கள் ஏற்படுத்திய மாற்றம்... டிஆர்பி விவரம் இதோ
சன்-விஜய் டிவி
தமிழ் சின்னத்திரை, முன்பை போல வழக்கமான கதைக்களங்களாக இல்லாமல் விதவிதமான கதைகளுடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சன், விஜய், ஜீ தமிழ் என இந்த 3 தொலைக்காட்சியிலும் சீரியல்கள் அட்டகாசமாக ஓடிக் கொண்டிருக்கிறது. டிஆர்பி விவரம் சீரியல்கள் வெற்றிகரமாக பல வருடங்கள் ஓடுவதற்கு ஒரு காரணம் மக்கள், அவர்கள் கொடுக்கும் ஆதரவால் டிஆர்பியும் அதிகரிக்கிறது.

வாரா வாரம் வியாழக்கிழமை வந்தாலே அந்த வாரத்திற்கான தமிழ் சின்னத்திரை சீரியல்களின் டிஆர்பி விவரம் வெளியாகிவிடும்.
சன் டிவி சீரியல்கள் கடந்த சில வாரங்களாக டாப் 5 இடத்தையும் பிடித்துக் கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வார டிஆர்பி பொறுத்த வரையில் சன் டிவி சீரியல்களின் 2 இடங்களை விஜய் டிவி பிடித்துள்ளது.
இதோ டாப் 5 சீரியல்களின் விவரம்
- மூன்று முடிச்சு
- கயல்
- சிங்கப்பெண்ணே
- சிறகடிக்க ஆசை
- அய்யனார் துணை