நேற்று இரவு நடிகர் டேனியல் பாலாஜிக்கு என்ன நடந்தது?- அழுதபடி அவரது நண்பர் கூறிய தகவல்
டேனியல் பாலாஜி
தமிழ் சினிமாவில் பயங்கர வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் டேனியல் பாலாஜி.
கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.
நேற்று (மார்ச் 29) இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இறப்பு செய்தி கேள்விப்பட்டவுடன் வெற்றிமாறன், கௌதம் மேனன், அமீர் போன்ற பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
நண்பரின் பேச்சு
டேனியல் பாலாஜி கோவில் கட்ட தொடங்கிய பிறகு அதிகமாக பக்தியில் மூழ்கி விட்டார்.
உதவி என்று அவரிடம் யாரு வந்தாலும் அவர்களுக்கு அள்ளிக்கொடுப்பார். ஸ்கூல், காலேஜ் படிக்கும் மாணவர்களுக்கு பீஸ் எல்லாம் கட்டியிருக்கிறார். ஏன் எனக்கே அவர்தான் பிசினஸ் தொடங்கி வைத்தார்.
படங்களில் நடிப்பதை தாண்டி ஆன்மீகத்தில் அதிகம் ஆர்வம் காட்டி வந்தார், அவருக்கு ஆன்மீகத்திலேயே தீட்சை பெற வேண்டும் என்பது தான் ஆசை. நேற்று அவருக்கு வலி ஏற்பட்ட போது அவருடன் ஒரே ஒருவர் மட்டும்தான் இருந்திருக்கிறார்.
அவர் தான் டேனியல் பாலாஜியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருக்கிறார். எங்களுக்கு எவ்வளவோ உதவிகள் செய்தவர் முடியாமல் இருந்தபோது நாங்கள் யாருமே பக்கத்தில் இல்லை, அவர் தனி ஆளாகத்தான் கஷ்டப்பட்டு இருக்கிறார்.
அந்த நேரத்தில் நாங்கள் கூட இல்லாமல் போய்விட்டோமே என்ற வருத்தம் எங்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று எமோஷ்னலாக பேசியுள்ளார்.

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
