திடீரென நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கு என்ன ஆனது?.. கவலையில் ரசிகர்கள்
ப்ரியா பவானி ஷங்கர்
தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா பயணத்தை தொடங்கியவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.
அதில் இருந்து அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நாயகியாக நடித்து முதல் தொடர் நடிப்பிலேயே ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
அவ்வளவு தான் இனி நடிப்பு பக்கம் வர மாட்டேன் என்பவர் மேயாத மான் படம் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார். அவர் கமிட்டாகி நடித்த சில தோல்வி படங்களும் உள்ளது.
கடைசியாக ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் டிமான்டி காலனி 2 படம் வெளியாக அவருக்கு வெற்றியை கொடுத்தது.
என்ன ஆனது
ஆனால் அதன்பிறகு ப்ரியா பவானி ஷங்கரை எந்த படத்திலும் காணவில்லை, தனது இன்ஸ்டாவிலும் அவ்வளவாக ஆக்டீவாகவும் இல்லை, இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தம் அடைந்தார்கள் என்றே கூறலாம்.
ஆனால் உண்மை என்னவென்றால் அவர் தனது காதலன் ராஜவேலை சந்திக்க ஆஸ்திரேலியா சென்றுள்ளாராம், அங்கே சில மாதம் இருந்துள்ளார். தற்போது சென்னை வந்துள்ள அவர் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.