பாரதியும், பட்டுப் புடவையில் கண்ணம்மாவும் ஒன்றாக, அடுத்து வரப்போகும் அழகான காட்சி- வீடியோவுடன் இதோ
பாரதி கண்ணம்மா சீரியல் பற்றிய பேச்சு மக்களிடம் அதிகம் உள்ளது.
சீரியலில் கடந்த சில மாதங்களாக ஒரே சண்டை, அழுகை என இருந்தாலும் இப்போது அடுத்தடுத்து ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் அழகிய காட்சிகள் வருகின்றன.
கடந்த வாரம் முழுவதும் அப்படி தான் இருந்தது. அடுத்து சீரியலில் பாரதியிடம் அனைவரும் மறைத்து வைத்திருந்த ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது.
அந்த பிரச்சனை எப்படி முடிவுக்கு வரும் என இந்த வாரத்தில் தெரிந்துவிடும்.
தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் செட்டில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பாரதியும், கண்ணம்மாவும் ஒன்றாக அமர்ந்து சாப்பாடு சாப்பிடும் காட்சியாக தெரிகிறது.
கண்ணம்மா பட்டுப் புடவையில் அழகாக காணப்படுகிறார். அநேகமாக அந்த காட்சி அஞ்சலியின் சீமந்த விழா காட்சியாக இருக்கும் என தெரிகிறது.