பிரபல நடிகையுடன் தொடர்பில் இருந்தாரா நாகார்ஜூனா.. கிசுகிசுவுக்கு மனைவி அமலா கொடுத்த பதில்
நடிகர் நாகர்ஜுனா தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பிரபலமான ஒருவர் தான். அவர் அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தனுஷ் உடன் அவர் நடித்து இருக்கும் குபேரா படமும் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

நடிகை தபு உடன் தொடர்பில் இருந்தாரா?
நடிகர் நாகர்ஜுனா 90 களில் நடிகை தபு உடன் சில படங்கள் நடித்து இருக்கிறார். அவர் நடிகை அமலாவை இரண்டாம் திருமணம் செய்து இருந்தாலும், தபு உடன் தொடர்பில் இருக்கிறார் என அந்த நேரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
அது பற்றி அமலாவே அந்த நேரத்தில் பதிலடி கொடுத்து இருக்கிறார். "என் கணவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தபு எனக்கு நெருக்கமானவர் தான். அவர் எப்போது ஹைதராபாத் வந்தாலும் எங்கள் குடும்பத்துடன் தான் தங்குகிறார் எனவும் அமலா கூறி இருந்தார்.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    