பாரதி கண்ணம்மா சீரியல் எப்போது முடிவுக்கு வருகிறது? ரசிகரின் கேள்விக்கு வில்லி வெண்பா பதில்
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் ஒரு காலத்தில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது சீரியலுக்கு மக்கள் இடையில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறதா என்றால் கேள்விக்குறி தான்.
காரணம் நீண்ட வருடங்களாக கதையே இல்லாமல் ஒரே ஒரு DNA டெஸ்ட் விஷயத்தை வைத்து தொடரை இழு இழு என இழுத்து வருகிறார்கள்.
இது ரசிகர்களுக்கு கடும் கடுப்பை ஏற்படுத்துகிறது, அதற்கு இப்போது உதாரணமாக ஒரு விஷயம் நடந்துள்ளது.
பரீனா கொடுத்த பதில்
இந்த பாரதி கண்ணம்மா தொடரில் வில்லியாக நடித்து வருபவர் பரீனா அசாத். இவர் தொடரில் வெண்பா வேடத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஒரு ரசிகர் சீரியல் எப்போது முடியும் என கேட்க அதற்கு அவர், டிஎன்ஏ டெஸ்ட் செய்து விடுவோம், செஞ்சிடுவோம் என பதில அளித்துள்ளார்.
காமெடி நடிகர் யோகி பாபுவின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அழகான வீடு