இந்தியாவில் முதன் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது எப்போது தெரியுமா.. தொகுப்பாளர் யார் தெரியுமா.. இதோ
சின்னத்திரையில் பிரமாண்ட என்டர்டைன்மெண்ட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.
2017ல் இருந்து தமிழில் துவங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்க துவங்கி, தற்போது ஐந்தாவது சீசன் வரை தொகுத்து வழங்கி வருகிறார்.
முதலில், தமிழில் பெரிதும் எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நாள் போக்கில் சூடுபிடிக்க துவங்கியது. இதனால் விஜய் டிவியின் TRP-யும் மிகப்பெரிய உச்சத்திற்கு சென்றது.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியளவில் முதன் முதலில் பாலிவுட்டில் தான் துவங்கியது. ஆம், கடந்த 2006ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 1 ஹிந்தி துவங்கியது.
முதல் முதலில் இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகரும் பின்னணி பாடகருமான அர்ஷத் வர்ஷி என்பவர் தான் தொகுத்து வழங்கினார்.
இதன்பின் வந்த இரண்டாம் சீசனை, நடிகை ஷில்பா ஷெட்டி, மூன்றாவது சீசனை அமிதாப் பச்சனும் தொகுத்து வழங்கியுள்ளனர்.
இப்படி ஹிந்தியில் துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.