குக் வித் கோமாளி 3வது சீசன் எப்போது தொடங்குகிறது- நடுவர் Chef Damu வெளியிட்ட சூப்பர் தகவல்
நாட்டில் உள்ள மக்கள் எல்லோரும் வருங்காலத்திற்காக ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இருக்கும் நேரத்தை கொண்டாட மறந்துவிடுகிறார்கள்.
அப்படி மக்களை சந்தோஷப்படுத்த தொலைக்காட்சிகளில் நிறைய நிகழ்ச்சிகள் வருகின்றன.
அப்படி புதிதாக தொடங்கப்பட்டு தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி 2. விஜய்யின் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
நிகழ்ச்சியின் 2வது சீசனும் முடிவுக்கு வந்துவிட்டது. வரும் ஏப்ரல் 14ம் தேதி இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
யார் ஜெயிப்பார்கள் என்று பார்ப்பதை தாண்டி ரசிகர்களுக்கு நிகழ்ச்சி முடிந்துவிட்டதே என்கிற பெரிய சோகம் தான் அதிகம் உள்ளது.
இந்த நிலையில் தான் Chef Damu கொடுத்த ஒரு பேட்டி சந்தோஷத்தை கொடுத்துள்ளது. அதாவது குக் வித் கோமாளியின் 3வது சீசன் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்க உள்ளதாம்.
அதோடு 3வது சீசனில் கோமாளிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார்.