குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் Grand Finale எப்போது தெரியுமா?- வெளிவந்த தகவல்
தமிழ்நாட்டு மக்கள் ஒரு நிகழ்ச்சியின் Grand Finaleவிற்காக ஆவலாக வெயிட்டிங். அது எந்த நிகழ்ச்சி என்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.
விஜய்யில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியை பற்றிய பேச்சு தான் எல்லா இடத்திலும் உள்ளது. வாரா வாரம் இந்நிகழ்ச்சிக்காக தான் மக்கள் ஆவலாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த வாரம் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களின் உறவினர்களை நிகழ்ச்சிக்கு அழைத்து வருகிறார்கள்.
புரொமோக்கள் எல்லாம் வெளியாகி மக்களிடம் செம ரீச். தற்போது நிகழ்ச்சி குறித்து ஒரு தகவல். அதாவது அடுத்த வார இறுதியில் கூட குக் வித் கோமாளி 2 இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லையாம்.
ஏப்ரல் 14ம் தேதி தமிழ் வருடப் பிறப்பு ஸ்பெஷலாக இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாம். அதுவும் மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி ஆக 5 மணி நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறதாம்.