ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஜெயலலிதா.. மிகப்பெரிய ஹிட் ஆன 80ஸ் படம் தான்! இது தெரியுமா
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருந்து வருகிறார். தற்போது 73 வயதிலும் ரஜினி பிசியாக படங்கள் நடித்து வருகிறார்.
வேட்டையன் படத்தை முடித்து இருக்கும் ரஜினி அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க இருக்கிறார்.
80களில் ரஜினி தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார். அப்போது அவர் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன படம் பில்லா.
நடிக்க மறுத்த ஜெயலலிதா
அந்த படத்தில் முதலில் ஜெயலலிதாவை தான் ஹீரோயினாக நடிக்க அணுகினார்களாம். ஆனால் ஜெயலலிதா சினிமாவில் ஒதுங்கி இருந்த காலம் அது என்பதால் தனக்கு அந்த வாய்ப்பு வேண்டாம் என உதறிவிட்டாராம்.
அதற்கு பிறகு தான் ஸ்ரீப்ரியாவுக்கு அந்த ரோல் கிடைத்து இருக்கிறது. இந்த விஷயத்தை ஜெயலலிதாவே ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
தான் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்க திணறுவதாக வெளியான பத்திரிக்கை செய்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயலலிதா எழுதிய கடிதம் தான் அது.



அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
