சன் டிவி-யில் மாஸ்டர் திரைப்படம் எப்போது ஒளிபரப்பாகிறது தெரியுமா? வைரல் போட்டோ
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர், ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.
50 % இருக்கைகளுடன் வெளியான இப்படம் எதிர்பார்த்ததை விட ரசிகர்களை தியேட்டர் பக்கம் வரவைத்தது, இதனால் மாஸ்டர் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்தது.
இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்து தினமும் எதாவது ஒரு விஷயம் இணையத்தில் வைரலாகி வருவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மாஸ்டர் திரைப்படம் சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் என்ற ப்ரோமோவின் புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.
மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான ப்ரோமோ வெளியாகாத நிலையில் தற்போது, இந்த வதந்தியை கிளப்பும் வகையில் புகைப்படம் பரவி வருகிறது.