பீஸ்ட் டுக்கு முன் மிகப்பெரிய ஹிந்தி பட வாய்ப்பை நிராகரித்த நெல்சன்! எந்த படம் தெரியுமா
இயக்குனர் நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் படம் ஹிட் கொடுத்த பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் ஆனார். ஆனால் அதற்க்கு பிறகு விஜய்யை வைத்து அவர் இயக்கிய பீஸ்ட் படம் தோல்வி அடைந்தது பெயரை அதிகம் டேமேஜ் செய்துவிட்டது.
அடுத்து அவர் ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். பீஸ்ட் தோல்வியானதால் ரஜினி அந்த படத்தில் இருந்து நெல்சனை நீக்கப்போகிறார் என தகவல் பரவியது, ஆனால் இறுதியில் படம் டிராப் ஆகவில்லை என ரஜினி தரப்பு உறுதி செய்தது. சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஒரு பக்கம் வைரலாகி கொண்டிருக்கிறது.

பீஸ்ட் படத்தை இயக்கும் முன்பு நெல்சனுக்கு ஹிந்தியில் ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. கோலமாவு கோகிலா ஹிந்தி ரீமேக் தான் அது. ஆனால் படம் ஒப்புக்கொண்டு நீண்டகாலமாக தொடங்காததால் அதில் இருந்து நெல்சன் வெளியேறிவிட்டார்.
அதற்க்கு பிறகு வேறொரு இயக்குனர் கமிட் ஆகி ஸ்ரீதேவி மகள் ஜான்வி நயன்தாரா ரோலில் நடித்து முடித்திருக்கிறார் . Good Luck Jerry என்ற அந்த படம் விரைவில் நேரடியாக ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகிறது.
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu